Regional02

மகா சிவராத்திரி விழா :

செய்திப்பிரிவு

நாகை காயாரோகண சுவாமி கோயில், அழகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், அமரநந்தீஸ்வரர் கோயில், மலையீஸ்வரன் கோயில், சட்டையப்பர் கோயில், கட்டியப்பர் கோயில், நடுவதீஸ்வரர் கோயில், வீரபத்திர சுவாமி கோயில், சொக்கநாதர் கோயில், நாகநாத சுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில், நாகூர் நாகநாதர் சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும், மயிலாடுதுறை, திருக்கடையூர் உள்ளிட்ட கோயில்களிலும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மேல் முதல் கால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, இரவு 10.30 மணிக்கு மேல் 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் 3-ம் கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு மேல் 4-ம் கால பூஜையும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

SCROLL FOR NEXT