Regional01

தேர்தல் விதிமீறல் 10 வழக்குகள் பதிவு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 29 மதுபாட்டில்கள், 230 வேட்டிகள், 5 பைகளில் கவரிங் நகைகள், ரூ.5.17 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி 7.72 கி.கி., 70 பாட்டில் சமையல் எண்ணெய், 2,900 கி.கி. அரிசி, 40 கி.கி. துவரம் பருப்பு, 590 பம்பரம், 176 கி.கி. குத்துவிளக்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT