தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் தமாகா சார்பில்எஸ்டிஆர் விஜயசீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் 6 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. 6 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார்.
அதன்படி தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். 49 வயதாகும் இவர்பிஎஸ்சி படித்துள்ளார்.
மாணவர் காங்கிரஸ், இளை ஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா தலைவராக உள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர்கடம்பூர் செ.ராஜு ஆகியோரை சந்தித்து விஜயசீலன் ஆசி பெற்றார்.