Regional02

தலைமைப் பண்பு மேலாண்மை குறித்து - திருப்பூர் அரசுப் பள்ளிகளில் கள ஆய்வு :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தலைமைப் பண்பு மேலாண்மையில் சிறந்து விளங்கும்பள்ளிகளை பற்றிய வீடியோ ஆவணப்படம் எடுப்பதற்காக, திருமூர்த்தி நகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளியின் தரம், மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் மேம்பாடு, வகுப்பறையில் கணினிகளின் பயன்பாடு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே தலைமைப் பண்பு, வாழ்வியல் திறன், நேர்மறையான சிந்தனை ஆகியவற்றைமுழுமையாக ஆய்வு செய்து அந்த அறிக்கையை, டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்துக்கு அனுப்ப உள்ளனர்.

அதன்படி, திருமூர்த்தி நகர்மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தலைமையில், துணை முதல்வர் விமலாதேவி, முதுநிலைவிரிவுரையாளர் பாபி இந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர், தாராபுரம் நஞ்சியம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி, ஊத்துக்குளி ஒன்றியம்சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருப்பூர் பூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வுமேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT