Regional02

மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருப்பூர் பிச்சம்பாளையம்  நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சுபாஷ் (23). இவர் தனியார் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். முத்தண்ணம்பாளையம், வாய்க்கால்மேடு பகுதியில் ஒரு வீட்டில் ஏ.சி. பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய நேற்று முன்தினம் மதியம் சுபாஷ் மற்றும் அவரது நண்பர் சுந்தரம் ஆகியோர் சென்றுள்ளனர். ஏ.சி. இயந்திரத்தின் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின் வயர் பட்டதில் சுபாஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ஊரக போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT