Regional02

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அலுவலர் பணி :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத்தேர்தலில் சிறப்பு பாதுகாப்பு அலுவலர்களாக பணிபுரிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்புப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் சிறப்புப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களின் விருப்பத்தை தங்களது அடையாள அட்டையுடன் கிருஷ்ணகிரி முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04343- 236134-ல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

தருமபுரி

தேர்தலின் போது தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் காவல் துறையினருடன்இணைந்து தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடலாம்.தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களும், ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விருப்ப மனு அளித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னாள் படை வீரர்கள் நலவாரிய அலுவலகத்திலும் விருப்ப மனு அளிக்கலாம். பதிவு செய் வோருக்கு மாவட்ட காவல் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து முறையான அழைப்பு விடுக்கப்படும்.

SCROLL FOR NEXT