Regional01

நாமக்கல்லில் இளைஞர் படுகொலை :

செய்திப்பிரிவு

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இச்சூழலில் நேற்று முன்தினம் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

தொடர்ந்து அதேபகுதியைச் சேர்ந்த நண்பர் முரளி (26) என்பவருடன் இரவு 11 மணியளவில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களை தாக்கி விட்டு தப்பினர். இதில், தாமரைக்கண்ணன் உயிரிழந்தார். முரளி படுகாயமடைந்தார். சம்பவம் தொடர்பாக எருமப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரம் தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

SCROLL FOR NEXT