திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன். 
Regional01

வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக ‘லிப்ட்’ வசதி : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக லிப்ட் வசதி செய்யப்பட உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கொ.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை மையம் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நாமக்கல் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறுகையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி 12 அறைகள், அறைக்கு ஏழு மேசைகள் என்று இருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ஆறு அறைகள் மற்றும் அறைக்கு 14 மேசைகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 மற்றும் 4-வது மாடிகளில் வாக்கு எண்ணிக்கை மையம், ஸ்டிராங் ரூம் இருப்பதால் பணியாளர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தற்காலிக லிப்டுகள் அமைக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

மனுதாக்கல் செய்யும் இடங்கள்

SCROLL FOR NEXT