கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் மயான சூறைத் திருவிழாவையொட்டி கொடி யேற்றப்பட்டது. 
Regional02

கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் - மயான சூறைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோயிலில் மயான சூறைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோயில் மயான சூறைத் திருவிழாவையொட்டி நேற்று கொடி ஏற்றப்பட்டது. இன்று (12-ம் தேதி) மகா சிவராத்திரியும், 13-ம் தேதி அலகு குத்தும் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறை புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 14-ம் தேதி விடாய் கஞ்சி ஊற்றுதல், 15-ம் தேதி மாலை 6 மணிக்கு அக்னி குண்ட தீ மிதி விழா, 16-ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மன் நகர்வலமும், 17-ம் தேதி இரவு 8 மணிக்கு கும்ப பூஜை மற்றம் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் கட்சி பிரமுகர்கள் யாராவது விழாவில் பங்கேற்று பிரச்சாரம், பரிசுகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க விழா நிகழ்ச்சி அனைத்தையும் வீடியோ பதிவு செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்கவும் அறிவுறுத் தப்பட்டனர்.

காவேரிப்பட்டணத்தில், மயான சூறைத் திருவிழாவை முன்னிட்டு இன்று (12-ம் தேதி) தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோயில் மற்றும் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் மயான சூறைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

SCROLL FOR NEXT