Regional01

அதிமுக, திமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகள் :

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் பழையூர், மண்மங்கலம், செம்மடை, செல்லாண்டிபாளையம், நெரூர் தென்பாகம், கடம்பங்குறிச்சி ஆகிய பகுதிகளில் வீட்டு சுவர்கள், சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றில் கட்சி விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளதாக வாங்கல் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது 5, அதிமுகவினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, கரூர் அமராவதி நகர் பெரியார் வளைவு பகுதியில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்திருந்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் மீது தலா 1 வழக்கு நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT