Regional01

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான - சிறப்பு எஸ்.ஐ.க்கள் இருவர் பணியிடை நீக்கம் :

செய்திப்பிரிவு

கோவையில் ரூ.1700 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில்சிறப்பு உதவி ஆய்வாளர்களாக இருளப்பன், கணேசன்ஆகியோர் பணியாற்றிவந்தனர்.

இவர்கள், மதுபோதையில் பிடிபட்ட கோவைப்புதூரைச் சேர்ந்த தர் என்ற இளைஞரிடம், வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காகவும், வாகனத்தை விடுவிக்கவும், காவல் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் ரூ.1,700 லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்புத் துறைபோலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பான அறிக்கையை மாநகர போலீஸார், காவல் ஆணையரிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர்சுமித்சரண் நேற்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT