கடலூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் பறக்கும்படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. 
Regional02

வருமான வரித்துறை சார்பில் - கடலூரில் பறக்கும் படையினருக்கு பயிற்சி :

செய்திப்பிரிவு

கடலூரில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண் காணிப்பு குழுவினருக்கு நேற்று முன்தினம் பயிற்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவின் தலைமை அலுவலர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் தேர்தல் கண்காணிப்பு பணி பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தர் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

இதில் வருமான வரித்துறை சார்பில், தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்க அளிக்கப்பட்டது. இதில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்வது மற்றும் மேல்நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரிவான பயிற்சி அளிக்கப் பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர்அருண் சத்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருமான வரித்துறை அலுவலர் நெடுமாறன், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT