கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை (12-ம் தேதி) முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் நாளை (12-ம் தேதி) தொடங்குகிறது. அதன்படி ஊத்தங்கரை(தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுக்களை ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்.
பர்கூர் தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை, பர்கூர் வட்டாட்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியரிடம் தாக்கல் செய்யலாம். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வேட் பாளர்கள் வேட்புமனுக்களை, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சி யரிடம் தாக்கல் செய்யலாம். வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை, சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல்மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நல அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்.
ஓசூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை, ஓசூர் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியரிடம் தாக்கல் செய்யலாம். தளி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி ஆணையரிடம் (கலால்) தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்கள் நாளை(12-ம் தேதி) முதல் வரும் 19-ம் தேதி வரை(விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 11 மணி முதல் 3 வரை மட்டுமே பெறப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.