ஈரோடு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் புதிய கணினியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் வழங்கினர். 
Regional02

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு - சக்தி மசாலா சார்பில் புதிய கணினி :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் கணினி வசதிகள் குறைவாக இருந்தது. இதனால் கணினி தொடர்பான பணிகளை மேற் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் புதிய கணினி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வாங்கி கொடுக்கப்பட்டது. இந்த கணினியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சீனிவாசன் உடனிருந்தார். 

SCROLL FOR NEXT