Regional01

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தண்டபாணி, கோட்டாட்சியர் ஏழுமலை, நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT