Regional02

18.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; கபிஸ்தலத்தில் 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை போலீ ஸாருக்கு கிடைத்த ரகசிய தக வலின்படி, பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை யிட்டபோது, அதில் ரூ.1,06,050 மதிப்புள்ள 18 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, லாரியில் இருந்த கும்பகோணம் சோலையப்பன்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் லிங்கதுரை(45), லாரி ஓட்டுநரான மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காட்டைச் சேர்ந்த சுந்தர்(32) ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், லிங்கதுரை அவரது வீட்டுக்கு அருகில் மாவுமில் நடத்தி வருவதும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைவான விலைக்கு வாங்கி குருணையாக அரைத்து, பல்லடத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு தீவனமாக அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT