Regional02

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் - முந்திரி உற்பத்தி, பயிர் பாதுகாப்பு குறித்து உழவர்களுக்கு திறன் பயிற்சி :

செய்திப்பிரிவு

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொச்சியில் உள்ள முந்திரி மற்றும் கொக்கோ மேம்பாட்டு இயக்குநரகம் ஆகியவை இணைந்து, முந்திரி உற்பத்தி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து உழவர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியை, நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தின. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி அண்மையில் நிறை வடைந்தது.

தொடக்க நிகழ்வில், பயற்சிக்கு வந்தவர்களை பயிர் மேலாண்மை இணை பேராசிரியர் எம்.ராஜு வரவேற்றார். நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வெ.அம்பேத்கர் பயிற்சியை தொடங்கிவைத்து, தலைமை வகித்தார். திருவிடைமருதூர் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் திருச்செல்வன் ஆகியோர், முந்திரி சாகுபடி யில் அனுகூலங்கள் குறித்தும், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறையில் செயல்படுத்தப் படும் உழவர்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

தோட்டக்கலை மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஜி.சதீஷ், மோகனலட்சுமி, ஜெயபிரபாவதி, கண்ணன் ஆகியோர், முந்திரி சாகுபடி தொடர்பாக தொழில்நுட்ப உரை நிகழ்த்தினர். முந்திரியில் உயர் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டை முனைவர் ராமநாதன் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT