திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

சட்டப்பேரவை தொகுதிகளுக்கு - வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு :

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களை அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி (திருநெல்வேலி), ஜி. கண்ணன் (பாளையங்கோட்டை), பிரதீக் தயாள் (அம்பாசமுத்திரம்), குழந்தைவேலு (நாங்குநேரி), உஷா (ராதாபுரம்) உடனிருந்தனர். அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT