திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 2, நம்பியாறு- 67, கொடுமுடியாறு- 25, களக்காடு- 3.8, மூலக்கரைப்பட்டி- 10.
பாபநாசம் அணை நீர்மட்டம் 115.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 348 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 103.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 445 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளில் நீர்மட்டம்: சேர்வலாறு- 127.25 அடி, வடக்குபச்சையாறு- 45.15 அடி, நம்பியாறு- 13.28 அடி, கொடுமுடியாறு- 14 அடி.