ஏரலில் கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வழங்கினார். உடன் எஸ்பி எஸ்.ஜெயக்குமார். படம்: என்.ராஜேஷ் 
Regional02

ஏரலில் கொலை செய்யப்பட்ட - எஸ்ஐ பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று நேரில் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு. இவர் கடந்த 1.2.2021 அன்றுஇரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தீப்பாச்சி நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ரா.முருகவேல் (39) என்பவர் சரக்கு வாகனத்தை அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதச் செய்து கொலை செய்தார். இச்சம்பவத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதல்நிலை காவலர் பொன் சுப்பையா பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்த முதல்நிலை காவலர் பொன்சுப்பையாவுக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும் என அன்றைய தினமே (பிப். 1)தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்து,பாலுவின் மனைவி பேச்சியம்மாளிடம் ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும், முதல்நிலை காவலர் பொன்சுப்பையாவிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும்வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகை

பணம் விநியோகத்தை தடுக்க நடவடிக்கை

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள மூன்று வீடியோ பிரச்சார வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு வாகனம் என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என, இந்த வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT