தேர்தல் 2021

பாஜக தலைவர்களுடன் நடிகர் அர்ஜுன் சந்திப்பு

செய்திப்பிரிவு

பாஜக தலைவர்களை நடிகர் அர்ஜுன் சந்தித்துப் பேசினார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷண் ரெட்டி ஆகியோரை சென்னையில் நடிகர் அர்ஜுன் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா. திரைப்படத் தயாரிப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "நடிகர் அர்ஜுன் பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் பாஜகவில் இணைவாரா அல்லது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வாரா என்பது ஓரிரு நாளில் தெரியவரும்" என்றனர்.

SCROLL FOR NEXT