Regional02

ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி :

செய்திப்பிரிவு

உடுமலையை அடுத்த திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர்களுக்கான செயல் ஆராய்ச்சி பயிற்சி வகுப்பு, திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜா தொடங்கி வைத்தார்.திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 4-ம்வகுப்பு கற்பிக்கும்ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் பேச்சு, எழுத்து வழக்குக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கற்கும் வழி நடத்த உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT