Regional02

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் 15 வேலம்பாளையத்திலிருந்து வீரபாண்டிக்கு அரசுப் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் ஞானசேகரன், நடத்துநர் பழனிச்சாமி ஆகியோர் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பழைய பேருந்து நிலையம் செல்லாமல், மேம்பாலத்தில் பேருந்து சென்றது. இதனை அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு பரிசோதகர், அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநருக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் பல்லடம் சாலையில் பேருந்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தெற்கு போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT