Regional02

அகல ரயில் பாதை பணிக்காக - தேனியில் வாகன போக்குவரத்து மாற்றம் :

செய்திப்பிரிவு

அகல ரயில் பாதைப் பணிக்காக தேனியில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போடி - மதுரை அகல ரயில் பாதைப் பணியில், தற்போது மதுரையில் இருந்து தேனி வரை தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் இன்ஜினை இயக்கி, இப்பகுதியில் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது ரயில்வே கேட் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. தேனியைப் பொறுத்தளவில் மதுரை சாலை, பாரஸ்ட் ரோடு, பெரியகுளம் சாலைகளில் தண்டவாளங்கள் குறுக்கிடுகின்றன.

எனவே கேட் அமைக்கவும், தார்ச் சாலை இணைவு பகுதியில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்யும் பணி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை சாலையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, பாரஸ்ட் ரோட்டில் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையும் பணிகள் நடக்கின்றன. நாளை (வியாழன்) இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பெரியகுளம் சாலையில் பணி நடைபெற உள்ளது.

எனவே இந்த நேரத்தில் வாகனங் கள் புதிய பேருந்துநிலையம், சிவாஜி நகர், என்ஆர்டி.நகர் வழியே மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளர்.

SCROLL FOR NEXT