திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 2-ம் கட்டமாக மத்திய துணை ராணுவப் படையினர் 84 பேர் வந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் 84 பேர், ஒரு துணை தளவாய் தலைமையில் கடந்த 28-ம் தேதி வருகை தந்தனர். கொடி அணிவகுப்பு, வாகன சோதனை உள்ளிட்டவற்றில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக ஒடிஷா மாநிலம் 151 பட்டாலியனைச் சேர்ந்த மத்திய எல்லை பாதுகாப்பு படையினர் 84 பேர், உதவி தளவாய் ராக்கேஷ் குமார் தலைமையில் திருநெல்வேலி மாவட்டம் வந்தனர். இவர்களை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை ஆய்வாளர் மரிய கிளாஸ்டன் ஜோஸ் வரவேற்றார். இவ்வீரர்கள் உட்கோட்ட வாரியாக பிரித்து பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.