திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வயல்வெளியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சட்டப் பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அம்பாசமுத்திரத்தில் வயல்வெளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அங்கு நெற்கதிர்களால் 100 % என்ற வடிவம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் VOTE என்ற ஆங்கில வார்த்தையை வைக்கோலால் உருவாக்கியிருந்தனர்.
அரசுத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர் சுற்றி நின்று 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த காட்சிகளை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஏர்வாடி
சேரன்மகாதேவி