Regional03

ஏரியில் இருந்து இளைஞர் உடல் மீட்பு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அருகே ஏரியில் இருந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தி.மலை அடுத்த வேங்கிக் கால் கிராம ஏரியில் (ஆட்சியர் அலுவலகம் முன்பு) இளைஞரின் உடல் மிதப்பது நேற்று காலை தெரிய வந்தது. இது குறித்து, அப் பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். மேலும், திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர் அருண்குமார்(28) என்பதும், திருவண்ணாமலை புது வாணிய குளத் தெருவில் வசிப்பவர் என்பதும், சென்னையில் உள்ள தனியார் ஷு கம்பெனியில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருவண்ணா மலை கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT