கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பங்கேற்ற ஹோமியோபதி மருத்துவர் சானிகாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 
Regional03

ஆதிபராசக்தி கலை கல்லூரியில் உலக மகளிர் தின விழா :

செய்திப்பிரிவு

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் மன்றத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முகமது சாதிக் தலைமை தாங்கினார். பேராசிரியை செல்லக்கண்ணு வரவேற்றார். வேதியியல் துறைத் தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராணிப்பேட்டை ஹோமியோபதி மருத்துவர் சானிகா பேசும்போது, ‘‘பெண் சிறப்பு மிக்கவள். உடல் உறுதி கொண்ட ஆணை விட, மன உறுதி கொண்டவள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டு துவண்டு போகாமல் எதிர்த்து நின்று போராடுவோம் என்பதுதான் இந்த ஆண்டின் மகளிர் தினத்தின் சிறப்பாகும். பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியை சத்யா நன்றி தெரிவித்தார். 

SCROLL FOR NEXT