சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 450 பேர் சேலம் வந்தனர்.
இந்நிலையில், ஒடிசா, பெங்களூருவில் இருந்து நேற்று 3 கம்பெனிகளைச் சேர்ந்த 282 எல்லை பாதுகாப்புப் படையினர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தனர்.
இவர்களில் தலா ஒரு கம்பெனியைச் சேர்ந்த தலா 94 பேர் சேலம் மாநகர பகுதி மற்றும் வாழப்பாடி பகுதிக்கு சென்றனர்.
ஒரு கம்பெனி வீரர்கள் நாகை மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர்.