கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் சிக்கபூவத்தி கிராம மக்கள் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் மக்கள் மறியல் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டை செல்லும் சாலையில் சிக்கபூவத்தி கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஆயிரத்திற்கும் அதிக மான மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தொடர்புடைய அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் ஆத்திர மடைந்த கிராம மக்கள் நேற்று காலை, காலிக் குடங்களுடன் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், குடிநீர் இல்லாமல் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும், சீராக குடிநீர் வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

தகவலறிந்து வந்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தொடர்புடைய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என போலீஸார் உறுதியளித் தனர். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT