Regional01

இரு விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கோங்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பி.ராஜேந்திரன்(50), சிதம்பரம் மகன் பாலசுப்ரமணியன்(35). கட்டிடத் தொழிலாளர்கள். இருவரும் நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலபச்சக்குடி விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.

மற்றொரு விபத்து: அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த பரதூரைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார்(23), கர்ணன்(39). போர்வெல் லாரி தொழிலாளர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு வெற்றியூர் பிரிவு பாதை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT