தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழ வெள்ளகால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிமோகன் (29). வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (36). இவர்கள், தங்களது நண்பர்கள் கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகியோருடன் காரில் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் இரவு ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந் தனர்.
ஆலங்குளம் பகுதியில் சென்றபோது, முக்கூடல் அடுத்த இடைகால் சர்க்கரை ஆலையில் இருந்துபழுதடைந்த இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனம் பெங்களூருவுக்கு சென்றுகொண்டு இருந்தது. அந்த வாகனம், எதிரேவந்த காரின் பக்கவாட்டில் உரசியது. இதில் நிலை தடுமாறிய கார்,சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இதில், காரில் பயணம் செய்த ஹரிமோகன், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து