Regional02

குடிநீர் கேட்டு மறியல் :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி காமராஜ் நகரில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் தடை பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலிக் குடங்களுடன் குன்னத்தூர் கூட்டுச் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT