Regional03

ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி திருப்பூர் மாவட்டத்தில் தீவிரம் :

செய்திப்பிரிவு

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளையும், குற்றவாளிகளையும் கணக்கெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், கணக்கெடுக்கும் பணியை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகளைக் கண்டறிதல், முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை, பழைய குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள்? மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்" என்றனர்.

SCROLL FOR NEXT