தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பிலான ‘ஹசீஷ்’ என்ற போதைப் பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 5 பாக்கெட்டுகளில் ‘ஹசீஷ்’ எனப்படும் கஞ்சா எண்ணெய் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக் குடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. ஆரம்பகட்ட விசாரணைக்கு பிறகு அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.