Regional01

தமிழகத்தில் 7 லட்சம் பெயிண்ட் தொழிலாளர்கள் வேலையிழப்பு : பெயிண்டர்கள் சங்க மாநில பொருளாளர் தகவல்

செய்திப்பிரிவு

பெயிண்டிங் வேலைகளுக்கு கார்ப் பரேட் நிறுவனங்களே ஆட்களை அனுப்புவதால் தமிழகத்தில் ஏழு லட்சம் பெயிண்ட் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என ஒன்றிணைந்த பெயிண்டர்கள் சங்க மாநிலப் பொருளாளர் முனி சாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஒன் றிணைந்த பெயிண்டர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திண்டுக் கல்லில் நடந்தது.

பெயிண்டிங் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு கூட்டத் தில் உறுப்பினர் அட்டை வழங் கப்பட்டது. கார்ப்பரேட் நிறு வனங்களால் பாதிக்கப்பட்டு வரும் பெயிண்டிங் தொழிலாளர்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் முனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கல்லூரி, வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெயிண்டிங் வேலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே ஆட்களை அனுப்புகின்றன. இதனால் தமிழகத்தில் பெயிண்டிங் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையிழப்பதால் அவர் களின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. பெயிண்டிங் தொழிலாளர்களின் நலன் கருதி கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT