Regional02

ராமநாதபுரம் நகரில் பாஜக வீடு வீடாக பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசின் திட்டங்களை ராமநாதபுரத்தில் வீடு, வீடாகச் சென்று பாஜகவினர் விளக்கி துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் நகரில் ராணி சத்திரத் தெரு, நான்கு ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் து.குப்புராமு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மேலும் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் மத்திய அரசு செய்த திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர் தலைவர் வீரபாகு, மாவட்ட செய்தித் தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT