Regional01

தபால் வாக்கு விண்ணப்பப் படிவம் வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவு :

செய்திப்பிரிவு

தபால் வாக்களிக்க விண்ணப்பப் படிவம் 12-டியை வழங்கும் பணியை கவனமாகும், புகாருக்கு இடமின்றியும் மேற்கொள்ள வேண்டும், என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் பேசினார்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆகியோருக்கு தபால் வாக்களிக்க விண்ணப்பப் படிவம் விநியோகிக்கும் பணி குறித்த பயிற்சிக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 80 வயதுக்கு மேற்பட்ட வாக் காளர்கள், மாற்றுத்திறனாளி வாக் காளர்கள் தபால் வாக்களிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

அதன்படி சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களின் வீடு களுக்கு நேரில் சென்று தபால் வாக்கிற்கான விண்ணப்பப் படிவம் 12-டி யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியை மிகுந்த கவனத்துடனும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

கூட்டத்தில் நாமக்கல் தொகுதி தேர்தல் அலுவலர் எம்.கோட்டைக்குமார், நாமக்கல் வட்டாட்சியர் ரா.தமிழ்மணி, நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உள்பட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

49,439 பேர் தபால் வாக்கு பெற தகுதி

இதுபோல் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 14,648 நபர்கள் உள்ளனர். இதன்படி மொத்தம் 49,439 நபர்கள் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி தபால் வாக்கு கேட்டு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT