Regional01

கடைக்காரரை தாக்கிய காவலர் இடமாற்றம் :

செய்திப்பிரிவு

துரித உணவு கடை உரிமையாளரை தாக்கிய புகாரில் வெள்ளித்திருப்பூர் காவலர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் - கொளத்தூர் சாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் (30) என்பவர் 4 ஆண்டுகளாக துரித உணவு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வெள்ளித் திருப்பூர் காவல் நிலைய காவலர் ராஜீவ்குமார் நேற்று முன்தினம் இரவு விக்ரமின் உணவு கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது காவலருக்கும், கடைக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் காவலர் தன்னையும், தனது மனைவியையும் தாக்கி கடையையும் சேதப்படுத்தியதாக அந்தியூர் காவல் நிலையத்தில் விக்ரம் புகார் செய்தார்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் காவலர் ராஜீவ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT