Regional03

சக்தி மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

குமாரபாளையம் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடப்பட்ட கம்பம் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

குமாரபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2-ம் தேதி தீர்த்தக்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து சக்தி அழைத்தல், பூவோடு இறக்குதல்,பொங்கல் வைத்தல், மாவிளக்கு, பூங்கரகம், அக்னிசட்டி ஊர்வலம், அலகு குத்துதல், வாண வேடிக்கை மற்றும் பெரும் பூஜை, மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெற்றது.

இதையடுத்து நேற்று கம்பம் ஊர்வலம் மற்றும் முளைப்பாரி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT