தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடங்களை கண்காணித்தல், கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் அளவுக்கு அதிகமாக மதுபானம் விற்பனையாதல், மதுக் கூடங்களில் மதுபானங்கள் இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை கண்காணிக்கவும், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் டாஸ்மாக் உதவி மேலாளர்கள் ஈஸ்வரநாதன் மற்றும் முத்துச்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதேனும் காணப்பட்டாலும், சட்டத்துக்கு புறம்பான மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான அனைத்து புகார்களையும் 9442052271 மற்றும் 9487652990 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 54 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீஸார் தீவிரமாக கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.