Regional02

மதுவுக்கு அடிமையானவர்கள் - மனக்கட்டுப்பாடு மூலம் மீள முடியும் : தூத்துக்குடி எஸ்பி அறிவுரை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் புனித மைக்கேல் மகாலில் விடிவெள்ளி தன்னார்வ அமைப்பின் 3-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மது அருந்துவோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பேசியதாவது:

குடி என்பது ஒரு நோயாகும். நாட்டில் பல குற்றங்கள் குடிக்கு அடிமையாவதால் நடக்கின்றன. குடிப்பழக்கத்தால் மது அருந்துபவர் மட்டுமின்றி, அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மனக்கட்டுப்பாடு மூலம் அதிலிருந்து மீண்டு வர முடியும். அப்படி மீண்டு வந்தால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும், இந்த சமுதாயத்துக்கும் நல்லது’’ என்றார்.

நிகழ்ச்சியில் தருவைகுளம் பங்குதந்தை எட்வர்ட், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விடிவெள்ளி குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் மற்றும் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT