Regional02

ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

தி.மலை அடுத்த கீழ்கச்சிராப் பட்டு கிராமத்தில் வசித்தவர் இளவரசன் மகன் உதயகுமார்(7). இவர், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன், அதே கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன்தினம் மாலைகுளிக்க சென்றார். அப்போது, ஏரியில் இருந்த சேற்றில் சிக்கி,உதயகுமார் உயிருக்கு போராடியுள்ளார். இதனால் மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம மக்கள், உதயகுமாரை மீட்டு தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தச்சம்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT