சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்திப் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சிக்கான ஆணையை துணைவேந்தர் முருகேசன் வழங்கினார். 
Regional01

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக - பொறியியல் மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உற்பத்திப் பொறியியல் இறுதியாண்டு மாணவர் களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்சாலைகளில் பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலத்தில் உள்ள உற்பத்திப் பொறியி யல் துறையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துறைத்தலைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டால் மாணவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள பிரபலமான தொழிற்சாலைகளில் மாதம் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகையுடன் மூன்று மாதங்க ளுக்கு தொழிற்பயிற்சியை கற்று பயன் அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் நேற்று 45 மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தொழிற்சாலை பயிற்சியானது மாணவர் களின் எதிர்காலத்தில் நூறு சதவீத வேலை வாய்ப்பிற்கு வழிவகுக் கும் என்று தெரிவித்தார்.

பின்னர் அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலேயே முன் மாதிரியான இந்த திட்டத்தைமுதன் முறையாக நிறைவேற் றிய துறைத்தலைவர் பாலசுப்பிர மணியம், உறுதுணையாக இருந்தபேராசிரியர்கள் லக்ஷ்மி நாராய ணன், மாணிக்கம், நரேந்திரசிங், சீமான், சிவராஜ் ஆகி யோரை பாராட்டினார்.

SCROLL FOR NEXT