பயிர்க்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கமிஷன் கேட்பதாக புகார் எழுந் துள்ளது.
விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் பொருட்டு, தமிழக அரசு பயிர்க் கடன் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகை வரை வைத்திருப்போரின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.
இதையடுத்து கடன் தள்ளுபடி செய்யப்படும் பயனாளிகளின் பட்டியல் தயாரிப் பில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உளுந்தூர் பேட்டை களமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் விவசாய கடன் ரத்து தொடர்பாக பத்திரத்தை அந்தந்த விவசாயிகளிடம் ஒப்படைக்க கூட்டுறவு நிர்வாகம் இடைத் தரகர் மூலமாக ரூ.1,000 கமிஷன் கேட்ப தாக புகார் எழுந்துள்ளது. இதேபோன்று செங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியி லும் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செங்குறிச்சி யைச் சேர்ந்த பாரதி என்பவர் கூறுகையில், "வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, ரூ.1,000 கொடுத் தால் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறினர். எனவே கூட்டுறவு கடன் சங்கங்களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
தேர்தல் நடத்தை விதிகளால்
சான்றிதழ் வழங்கவில்லை
இதையடுத்து விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கூட்டுறவு இணைப் பதிவாளர் பிரபாகரிடம் கேட்டபோது, "தனதுகவனத்திற்கு இதுவரை வர வில்லை.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சான்றிதழ் யாருக்கும் வழங் கப்படவில்லை. எனவே கமிஷன் கேட்பதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.