சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இம்மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள 65 வயதுக்குட்பட்ட முன்னாள் படை வீரர்கள், தங்களது அசல் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை விவரத்துடன் சிவகங்கையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பணிக்கு உரிய மதிப்பூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.