சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் காலனியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் ஆய்வு செய்தார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார். 
Regional01

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு :

செய்திப்பிரிவு

சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் காலனியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

சேலம் தெற்கு, ஏற்காடு மற்றும் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் காலனியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன், சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மின்னணு இயந்திரங்களை கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், பாதுகாப்பு வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்டவை போதுமான அளவில் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, “சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளுக்கும் சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT