புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ் சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று விவசாயி கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 100-வது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத் தியும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங் கிணைப்புக்குழு சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க(இந்திய கம்யூ) மாவட்டத் தலைவர் வீரமோகன் பேசினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், ஏஐடி யுசி, சிஐடியு, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந் தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியத் தலைவர் ஜீவபாரதி தலைமை வகித்தார்.
திருச்சியில்...
புதுக்கோட்டையில்...