பாளையங்கோட்டை சமாதான புரம் விஸ்வகர்ம எல்லாம் வல்ல சுந்தர விநாயகர் கோயில் வளாகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் 112-வது பிறந்த தினவிழா நடைபெற்றது. விஸ்வ கர்ம மகாஜன சங்க அவைத் தலைவர் வி. அனந்தநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. தங்கவேல் வரவேற்றார். பொருளாளர் எஸ். மாசானமுத்து முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் ஜி. முருகமுரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.