Regional02

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார்(35), ஆறுமுகம் மகன் மணிகண்டன் (30) ஆகிய இருவரும் ஏரியை ஏலம் எடுத்து மீன் வளர்க்கும் தொழில் செய்து வந்தனர். இருவரும் நேற்று எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள ஏரியை பார்ப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது, திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT